Wednesday, November 12, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமக்கள் ஆதரவுடனேயே தந்தை பதவியேற்பார் - நாமல் ராஜபக்ஷ

மக்கள் ஆதரவுடனேயே தந்தை பதவியேற்பார் – நாமல் ராஜபக்ஷ

மஹிந்த ராஜபக்ஷ மக்களுடன் தலைமைத்துவத்தை விட்டு வெளியேறியதாகவும், மக்களின் விருப்பத்துடன் தான் மீண்டும் பதவி ஏற்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்காக கொழும்பில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீழ்ந்த நாடு மீண்டும் எழுச்சி பெறப் போராடுவதன் மூலம் மீண்டும் வீழ்ச்சியடையலாம் என அவர் கூறினார்.

கொழும்பிற்கு கடுமையான பாதுகாப்பைப் பிரயோகிப்பதன் மூலம் சுற்றுலாத்துறை, முதலீடுகள் மாத்திரமன்றி நாட்டின் நன்மதிப்பும் சேதமடையக்கூடும் என அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தப் போராட்டத்தின் மூலம் வீழ்வது ராஜபக்ஷர்களும், ரணில் விக்ரமசிங்கவும் அல்ல. முழு நாடுமே வீழ்ச்சியடையும்.

அத்துடன், தனது வீட்டில் வந்து நாய்க்குட்டியை திருடியவரை கைது செய்தமை போன்று, நாடாளுமன்றத்திற்கு தீ வைக்க முயன்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles