Monday, March 30, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகளுத்துறை சிறுமி மரணம்: விடுதி உரிமையாளரின் மனைவிக்கு பிணை

களுத்துறை சிறுமி மரணம்: விடுதி உரிமையாளரின் மனைவிக்கு பிணை

களுத்துறை சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதி உரிமையாளரின் மனைவியை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் இன்று மீண்டும் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விடுதி உரிமையாளரின் மனைவியை தலா இரண்டு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க களுத்துறை நீதவான் நிதா ஹேமமாலி ஹல்பண்தெனிய உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் நண்பி, நண்பியின் காதலன் மற்றும் பிரதான சந்தேகநபரின் காரை எடுத்துச் சென்ற நண்பர் ஆகியோரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles