Thursday, November 13, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீட்டில் தனிமையிலிருந்த யுவதி மர்மமான முறையில் மரணம்

வீட்டில் தனிமையிலிருந்த யுவதி மர்மமான முறையில் மரணம்

வீடொன்றில் தனியாக இருந்த 25 வயதுடைய திருமணமான யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக இங்கிரிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இங்கிரிய, போதினாகல – யஹலவத்த பகுதியைச் சேர்ந்த யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவன் பணி முடிந்து வீட்டிற்கு சென்றபோது சமயலறையில் மனைவி மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு உடனடியாக இங்கிரிய பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

யுவதி விழுந்து கிடந்த சமையலறைக்கு அருகாமையில் உள்ள அறையொன்றில், சுவரில் இருந்து மின் குதை (பிளக் பொயின்ட்) ஒன்று கழற்று காணப்பட்டதாக காவல்துறைியனர் தெரிவிக்கின்றனர்.

கடும் மழையின் போது மின்னல் தாக்கி குறித்த யுவதி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles