Thursday, November 13, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாத்தறை வர்த்தக நிலையமொன்றிலிருந்து இந்திய முட்டைகள் மீட்பு

மாத்தறை வர்த்தக நிலையமொன்றிலிருந்து இந்திய முட்டைகள் மீட்பு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை முட்டைகள் மாத்தறை – வல்கம பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் சுகாதார பிரிவின் உணவு கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளினால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர்கள் கால்நடை உற்பத்தி, சுகாதாரத் திணைக்களத்திற்கு அறியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரச வணிகக் கூட்டுத்தாபனத்தினால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை, வெதுப்பக உற்பத்திகளுக்காக மாத்திரம் வழங்குவதற்கு கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் அனுமதி வழங்கி இருந்தது.

இந்த நிலையில், மாத்தறை பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரது சகோதரர், வெதுப்பகம் ஒன்றை நடத்தி வருவதாகவும், அவருக்கு கிடைக்கப்பெற்ற முட்டைகள் குறித்த வர்த்தக நிலையத்திலிருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles