நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று (12) மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, நேற்று 308.66 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 306.38 ரூபாவாக குறைந்துள்ளது.
322.70 ரூபாவாக காணப்பட்ட டொலரின் விற்பனை பெறுமதி இன்று 320.03 ரூபாவாக குறைந்துள்ளது.
அதேநேரம் ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று உயர்வடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.