யாழ்ப்பாணம் – கோப்பாய் – உரும்பிராய் பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் நேற்று (11) பெண்ணெருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 10ஆம் திகதி இரவு குறித்த பெண் உறங்கச் சென்றதாகவும், காலையில் கணவன் கண்விழித்து பார்த்தபோது மனைவி வீட்டில் இல்லாததை அவதானித்ததாகவும், பின்னர் தனது மனைவியை தேடியதாகவும் கணவன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வீட்டின் அருகில் உள்ள கிணற்றிலிருந்து குறித்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்இ குறித்த மரணம் தற்கொலையா? கொலையா? என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.