Wednesday, February 25, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகளுத்துறை சிறுமி மரணம்: பிரதான சந்தேகநபர் விளக்கமறியலில்

களுத்துறை சிறுமி மரணம்: பிரதான சந்தேகநபர் விளக்கமறியலில்

களுத்துறை விடுதியிலிருந்து வீழ்ந்து 16 வயதான மாணவி உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 29 வயதான பிரதான சந்தேகநபரை, கடந்த 10 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி 48 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க காவல்துறையினர் அனுமதி பெற்றனர்.

இந்தநிலையில், குறித்த கால அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று (12) மீண்டும் களுத்துறை நீதிவான் முன்னிலையில் சந்தேகநபர் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

அதன்போது, அவரை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை தடுப்புக் காவலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles