Wednesday, November 12, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎம்பிலிபிட்டியவில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு

எம்பிலிபிட்டியவில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு

சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது எம்பிலிபிட்டிய பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அந்த வாகனத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எம்பிலிபிட்டிய – மஹாபலஸ்ஸ பகுதியில் இரவு நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகத்திற்கிடமாக பயணித்த லொறியொன்றை நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை மீறிய லொறி சாரதி, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், வாகனத்தை செலுத்தியபோது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில் தப்பிச்சென்ற சந்தேகநபர்கள் லொறியிலிருந்த மாடுகளை காட்டுப் பகுதியில் விடுவித்துவிட்டு, வீரகட்டிய பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

அதன்போது, பொலிஸார் அவர்களை சுற்றிவளைத்தனர். சம்பவத்தில் லொறியில் இருந்த ஒருவர் காயமடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், அவர் வைத்தியசாலைக்கு முன்னதாகவே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

லொறியிலிருந்த மேலும் மூவரை பொலிஸா் கைது செய்ததுடன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பசுவொன்று கால்நடை மருத்துவரிடம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

இதேவேளை, லொறியை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் வாகனத்துக்கு இடையூறு ஏற்படுத்திய கார் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles