யாழ்.மாவட்ட விவசாயிகளால் பயிரிடப்பட்ட 22,000 கிலோகிராம் புளி வாழைப்பழங்கள், டுபாய்க்கு ஏற்றுமதி செய்ய தயாராக இருப்பதாக வடமாகாண விவசாய நவீனமயமாக்கல் திட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் முதற்கட்டமாக 250 யாழ்ப்பாண விவசாயிகள் பயிரிட்டுள்ள புளி வாழைப்பழங்கள் டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் 700 வாழை விவசாயிகள் ஏற்றுமதிக்காக புளி வாழைகளை பயிரிட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் புத்தூரில் வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை பார்வையிட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இணைந்தார்.