Sunday, August 10, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு16 மாணவிகளை வன்புணர்ந்த ஆசிரியர் கைது

16 மாணவிகளை வன்புணர்ந்த ஆசிரியர் கைது

16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் களுத்துறை ஆசிரியர் இன்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

30 வயதான இவர் கணிதம் கற்பிக்கும் ஆசிரியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் திருமணமானவர், அவருக்கு எதிராக அவரது மனைவியும் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களில் களுத்துறை பிரதேச பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரின் மகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சந்தேகநபர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் போது எடுக்கப்பட்ட 16 வீடியோ பதிவுகள் வெளிவரும் என்றும், அவர்களை அவதானித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளை கண்டறிய மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என்றும் களுத்துறை சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

களுத்துறை வடக்கு கல்லுப்பாறையில் தனியார் வகுப்புகளை நடத்தும் சந்தேகத்திற்குரிய ஆசிரியர் வேறு சில இடங்களில் சிறு குழுக்களாக வகுப்புகளை நடத்தியுள்ளதாகவும் அங்கும் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles