Sunday, August 10, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசகர் உட்பட இருவர் கைது

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசகர் உட்பட இருவர் கைது

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரும் ஆலய நிர்வாக உறுப்பினர் ஒருவரும் நெடுங்கேணி பொலிஸாரால் இன்றைய தினம் (11) கைது செய்யப்பட்டனர்.

வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விக்கிரகங்கள் மீண்டும் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஆலயத்தில் பூஜை நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்ததுடன் நேற்றைய தினம் புதன்கிழமை சங்காபிஷேக நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிலையில், விசாரணை ஒன்றிற்காக ஆலய நிர்வாகத்தினரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஆலயத்தின் பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர் ஆகிய இருவரும் இன்றைய தினம் காலை நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோதே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles