Sunday, August 10, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் சேவை வழமைக்கு

ரயில் சேவை வழமைக்கு

இன்று முதல் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால் தங்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் அடுத்த வாரம் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அதன் தலைவர் சுமேத சோமரத்ன எச்சரித்துள்ளார்.

இதேவேளை, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்று அலுவலக சேவைகள் உட்பட 22 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

மோசடி குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு வணிக பிரதிப் பொது முகாமையாளர் பதவி வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நேற்று இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles