Wednesday, December 17, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகம்பளையில் யுவதியொருவர் மாயம்

கம்பளையில் யுவதியொருவர் மாயம்

வீட்டை விட்டு வெளியேறி பணியிடத்திற்கு சென்ற யுவதியொருவர் கடந்த ஐந்து நாட்களாக காணாமல் போயுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கம்பளை, வெலிகல்ல, எல்பிட்டிய மற்றும் மகாவலி ஆற்றின் கரையோரப் பகுதிகள் உள்ளிட்ட வனப்பகுதிகளில் யுவதியைத் தேடும் நடவடிக்கையை கிராம மக்களும் கம்பளை பொலிஸாரும் ஆரம்பித்துள்ளனர்.

எல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பாத்திமா முனவ்வரா என்ற யுவதியே காணாமல் போயுள்ளார்.

அவர் கெலிஓயாவில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணியாற்றியதாக அவரது சகோதரர் மொஹமட் இம்ரான் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் செல்வதற்காக யுவதி வீட்டை விட்டு வெளியேறியதாக பாத்திமாவின் தாயார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். செல்லும்போது பஸ் கட்டணமாக நூறு ரூபா கேட்டதாகவும், தன் மீதும், யார் மீதும்தங்களுக்கு எந்த பகையும் இல்லை என்றும் தாயார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles