Thursday, December 11, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு25,000 குடும்பங்களுக்கு இலவச சூரிய படலம்

25,000 குடும்பங்களுக்கு இலவச சூரிய படலம்

குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு இலவச சூரிய படலங்களை வழங்கும் நடவடிக்கை, அமைச்சரவையின் அனுமதியின் பிறகு தொடங்கப்படும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் 500 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை தேசிய மின் கட்டமைக்கு சேர்க்க எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக 10,000 வீடுகளுக்கு சூரிய படலம் மூலம் மின்சாரம் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இரண்டாம் கட்டத்தின் கீழ் 15,000 வீடுகளுக்கு சூரியப்படலம் மூலம் மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக ஒரு வீட்டுக்கு 25 இலட்சம் ரூபா ஒதுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles