கணிதம் கற்பிக்கும் களுத்துறை தனியார் உதவி வகுப்பு ஆசிரியர் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து அப்பகுதியை விட்டு தப்பி சென்றுள்ளார்.
பாடசாலை மாணவிகளை வகுப்பறையில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய ஆசிரியர் அவர்களை வீட்டில் இறக்குவதாக கூறி களுத்துறை லாகொஸ்வத்த பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று வன்புணர்ந்துள்ளதுடன், அதனை கைப்பேசியில் பதிவு செய்திருந்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், ஸூம் தொழில்நுட்பம் மூலம் சிறுமிகளுக்கு வகுப்புகள் நடத்த இணைப்புகள் அனுப்பப்பட்டு, பெற்றோர் இல்லாத நேரத்தில் ஆடைகளை கழற்றுமாறு அறிவுறுத்தும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரை தனது மடிக்கணினியில் அனைத்து காணொளிகளையும் சேமித்து வைத்திருந்ததை அவரது மனைவி அவதானித்துள்ளார்.
பின்னர் காணொளிகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட சிறுமிகளின் பெற்றோருக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து முறைப்பாடு அளிக்கப்பட்டதாக பொலிஸார் அதிகாரி தெரிவித்தார்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களில் களுத்துறை பிரதேச பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரின் மகளும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸ் பிரிவு குற்றத்தடுப்பு ஆய்வுகூட அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேகத்திற்குரிய கணிதம் கற்பிக்கும் ஆசிரியர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.