Thursday, January 16, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம்: மூவர் கைது

15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம்: மூவர் கைது

மினுவாங்கொடையில் 15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் மினுவாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர், அவரின் தந்தை, மற்றும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை, ஓபாத பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவர் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி கடத்தப்பட்டுள்ளதாக வெல்லவாய காவல்நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

ஓபாத பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரால் குறித்த சிறுமி கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமிக்கும் இளைஞருக்கும் இடையே காதல் தொடர்பு இருந்து வந்ததாகவும், சிறுமி அந்த உறவை முறித்துக் கொண்டதால் குறித்த இளைஞர் தொடர்ந்தும் அவரை அச்சுறுத்தி வந்துள்ளார்.

அதன் காரணமாக சிறுமியை வெல்லவாய பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்தநிலையில் குறித்த இளைஞர், சிறுமி தங்கவைக்கப்பட்டிருந்த உறவினரின் வீட்டுக்குச் சென்று சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles