Sunday, October 12, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸாரை தாக்கிய மூவர் கைது

பொலிஸாரை தாக்கிய மூவர் கைது

ஹொரவ்பத்தான, கபுகொல்லாவ, அலியகட பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கி கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கபுகொல்லேவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு உத்தியோகத்தர்கள் நேற்று (09) முறைப்பாடு ஒன்றினை விசாரிப்பதற்காக அலியகடை பிரதேசத்திற்குச் சென்றிருந்த போது தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் அலியகட பிரதேசத்தைச் சேர்ந்த 21, 23 மற்றும் 24 வயதுடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கபுகொல்லேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று கெபித்திகொல்லேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles