நாடாளுமன்றத்துக்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சோசலிச வாலிபர் சங்கம் மற்றும் மக்கள் விடுதலை முன்னனியுடன் தொடர்புடைய சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இணைந்து போராட்டம் நடத்துவதால் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சேதம் தொடர்பான இழப்பீடு கோரி இலங்கை நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யவும், இழப்பீடு வழங்குவதில் தாமதம் செய்தவர்களை தண்டிக்கக் கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.