களுத்துறையில் 16 வயதுடைய சிறுமி உயிரிழப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான பிரதான சந்தேக நபரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரினால் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மேற்கண்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சம்பத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.