Thursday, January 16, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடன் மறுசீரமைப்பு கோரிக்கையை முன்வைத்தது இலங்கை

கடன் மறுசீரமைப்பு கோரிக்கையை முன்வைத்தது இலங்கை

இருதரப்பு கடன் வழங்குநர் குழுவின் முதலாவது கூட்டத்தில், கடன் மறுசீரமைப்பு தொடர்பான கோரிக்கையை இலங்கை உத்தியோகபூர்வமாக முன்வைத்துள்ளதென பரிஸ் கிளப் அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் இணையவழி முறைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், 17 நாடுகள் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவை உருவாக்கியுள்ளன.

இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் இணைத்தலைமையில், கடன் மறுசீரமைப்புக்கான இலங்கை அதிகாரிகளின் கோரிக்கை இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், இலங்கை அதிகாரிகள் கலந்துகொண்டு கடன் மறுசீரமைப்புக்கான கோரிக்கையை முறைப்படி முன்வைத்ததாக பரிஸ் கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிகாரிகள், தங்களது அதிகாரப்பூர்வ இருதரப்பு கடனாளிகளுக்கு, மறுசீரமைப்பின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒப்பீடு ஆகியவற்றுக்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகள் இலங்கை தொடர்பான, அண்மைய நுண்பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் இலங்கையுடனான தங்களது உறவின் தற்போதைய நிலைவமை தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அதேநேரம், சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை குறித்த குழு வரவேற்றுள்ளதாக பரிஸ் கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையின் கடன் வழங்குநர் நாடுகளுக்கு இடையில், இணையத்தள முறைமையில் நேற்று இடம்பெற்ற முதலாவது சந்திப்பில், சீனா பார்வையாளர் நாடாக கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles