பேர வாவியில் குளிக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை எனவும், என்னை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுங்கள் என கூறி தாம் நடித்ததாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம தெரிவித்துள்ளார்.
நேற்று (09) பேர வாவிக்கு அருகில் இருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு போராட்டத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளை பார்வையிட சென்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.