சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணியாளர்கள் குழுவொன்று மே 11 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
இந்த வருடத்தின் பிற்பகுதியில் கடன் மீளாய்வு பணிக்கு முன்னதாக, சர்வதேச நாணய நிதியக் குழுவின் இந்த விஜயம் அமையவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசனும் இந்த விஜயத்தில் கலந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.