Monday, May 5, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடாளுமன்றம் இன்று கூடுகிறது

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை கூடவுள்ளது.

இன்று முற்பகல் 9.30 முதல் 10.30 வரை நேரம் வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 10.30 முதல் பிற்பகல் 5 மணி வரை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் செஸ் வரி தொடர்பான சரத்து, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டு கட்டளைச் சட்டம், விசேட வியாபாரப் பண்ட அறவீட்டு கட்டளைச் சட்டம் 8 சரத்துகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான 3 ஒழுங்குவிதிகள் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

இதனையடுத்து, பிற்பகல் 5 மணி முதல் பிற்பகல் 5.30 வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles