தேசிய தாதியர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் முன்வைத்த கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சர்கள் சபை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சுகாதார அமைச்சின் கீழ் உள்ள தாதியர் கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்றுவது தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணையை ஆராய்ந்து அமைச்சரவையில் அறிக்கை சமர்ப்பிக்க கடந்த முதலாம் திகதி அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.
அவர்கள் அளித்த பரிந்துரைகளை கருத்தில் கொண்டு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.