இத்தாலியில் நடைபெற்ற 200மீ ஸ்பிரிண்ட் இன்டர்நேஷனல் போட்டியில் ஆசியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீரரான யுபுன் அபெகான் 20.37 வினாடிகளில் (+0.1மீ/வி) பந்தய தூரத்தை கடந்து மற்றொரு தேசிய சாதனையை படைத்துள்ளார்.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னர் யுபுன் அபேகோனின் செயற்பாடுகள் திருப்தி அளிப்பதாக இலங்கை தடகளத் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற யுபுன் அபேகோன், எதிர்வரும் 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும், அடுத்த 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்க ஏற்கனவே தகுதி பெற்றுள்ளார்.