Sunday, August 10, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 25 ஆவது அமர்வு நாளை

ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 25 ஆவது அமர்வு நாளை

கொழும்பில் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவின் 25 ஆவது அமர்வில் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தகச் சலுகை மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளன.

நாளை 9 ஆம் திகதி, வெளிவிவகார அமைச்சில் கூட்டப்படவுள்ள இந்த கூட்டத்திற்கு, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் ஐரோப்பிய வெளிவிவகார நடவடிக்கையின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் பாவோலா பாம்பலோனி ஆகியோர் தலைமை தாங்கவுள்ளனர்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள், நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள், வர்த்தகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, கல்வி, சுற்றுச்சூழல், பாதுகாப்பு, மீன்பிடி, பொதுப் பாதுகாப்பு ஆகிய அமைச்சுகளின் பிரதிநிதிகளை இலங்கை பிரதிநிதிகள் கொண்டுள்ளனர் , நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

கூட்டு ஆணைக்குழுவின் கூட்டத்தின் கடந்த அமர்வு 2022 பெப்ரவரியில் பிரஸல்ஸில் நடைபெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles