Saturday, November 1, 2025
25 C
Colombo
செய்திகள்விளையாட்டுICC தரவரிசையில் பாகிஸ்தான் முதலிடம்

ICC தரவரிசையில் பாகிஸ்தான் முதலிடம்

கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் ஐ.சி.சி.யின் ஆடவர்க்கான ஒருநாள் அணி தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

கராச்சியில் நடந்த இருதரப்பு ஒருநாள் தொடரின் நான்காவது போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான அபார வெற்றிக்குப் பிறகு, ஆண்கள் ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் புதிய நம்பர்-1 அணியாக உள்ளது.

இன்னும் ஒரு ஆட்டம் எஞ்சியுள்ள தொடரில் 4-0 என முன்னிலை வகிக்கும் பாகிஸ்தான் 113 புள்ளிகளைப் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்த தரவரிசையில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா முறையே 2, 3 ஆம் இடங்களை பிடித்துள்ளன.

தொடரின் தொடக்கத்திற்கு முன்னர் ஒருநாள் தரவரிசையில் 106 புள்ளிகளுடன் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்தில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles