வெசாக் அலங்காரங்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டதால், 900 மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு தமது உற்பத்திப் பொருட்களை போட்டி விலையில் விற்பனை செய்யக்கூடிய புதிய சந்தை உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.