இலங்கையில் வாகன இறக்குமதியை அனுமதிப்பது குறித்து புதிதாக மீண்டும் அவதானம் செலுத்தப்படுவதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகனங்களை இறக்குமதி செய்யத் தடை நீடிப்பதனால் உள்நாட்டில் பாவித்த வாகனங்களே கைமாற்றப்பட்டு வரும் நிலையில், வாகனங்களுக்கான இறக்குமதிக்கு அனுமதிக்குமாறு இறக்குமதியாளர்கள் அரசாங்கத்தை கோரி வருகின்றனர்.
இந்நிலையில் அரசாங்கம் இந்த கோரிக்கை தொடர்பாக பரிசீலனை செய்ய ஆரம்பித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
ஜூலை மாதம் முதல்கட்டமாக, தற்போது இறக்குமதி தடை நிலவுகின்ற சிலவகையான பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.
அதன் பின்னர் வாகன இறக்குமதி தொடர்பான சாதகமான தீர்மானம் ஒன்று எடுக்கப்படலாம் என்றும் நிதியமைச்சின் தகவல்கள் சொல்கின்றன.