தற்போது பெய்து வரும் மழையால் தொற்றுநோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, டெங்கு, இன்புளுவன்சா, வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
டெங்கு தொற்று நோயாக உருவாகியுள்ளதைக் குறிப்பிட்டுள்ள சுகாதாரத் திணைக்களம், கம்பஹா, கொழும்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் வேகமாக அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், வயிற்றுப்போக்கு நோய்கள் வராமல் தடுக்க, உணவு உண்ணும் போது கவனமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்புளுவென்சா தொற்று நோயாக பரவும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு முகக்கவசத்தை முடிந்தவரை அணிவது மிகவும் அவசியமானது என சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகளவில் காணப்படுவதுடன், இவ்வருடம் இதுவரையில் சுமார் 2600 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.