Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுத்தர் சிலைக்கு அருகில் கைவிடப்பட்ட சிசு: தாய் கைது

புத்தர் சிலைக்கு அருகில் கைவிடப்பட்ட சிசு: தாய் கைது

வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலியதேவ குகை விகாரைக்கு முன்பாக உள்ள புத்தர் சிலையின் கீழ் சிசுவை விட்டுச் சென்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் மாத்தளை உக்குவெல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய திருமணமான பெண் ஆவார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான் இரண்டு குழந்தைகளுக்கு தாய் எனவும், அண்மையில் பிறந்த குறித்த குழந்தையின் தந்தையுரிமையை கணவர் மறுத்ததால் விரக்தியில் குழந்தையை கைவிட்டதாகவும் கூறியுள்ளார்.

வீதியின் இருபுறமும் இருந்த கண்காணிப்பு கமரா அமைப்புகளை சோதனையிட்டதன் பின்னர் சந்தேகநபரை கைது செய்ய முடிந்ததாக வத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தர் சிலைக்கு அடியில் கைவிடப்ப்ட நிலையில் மீட்கப்பட்ட பிறந்து ஐந்து நாட்களே ஆன சிசு வத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அங்கு போதிய வசதிகள் இல்லாததால் கண்டி தேசிய வைத்தியசாலையின் சிசு பிரிவுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் தாயை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles