மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்மொக்கன் துறைக்கு அருகில் நேற்று (05) சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 5 பேர் மன்னார் கடற்படை முகாமின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 7 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களும்,38 வயதுடைய ஆண் ஒருவரும், 16 மற்றும் 37 வயதுடைய இரண்டு பெண்களும் அடங்குவர்.
கைதனாவர்கள் வவுனியா பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாவர்.
அவர்கள் பயணித்த படகு கடற்படையினரின் பிடியில் உள்ளதுடன், அவர்கள் கொண்டு சென்ற எரிபொருள் மற்றும் ஏனைய உபகரணங்கள் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் உள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (06) மன்னார் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.