Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் பௌசர் விபத்து - 33 ஆயிரம் லீற்றர் டீசல் கசிவு

எரிபொருள் பௌசர் விபத்து – 33 ஆயிரம் லீற்றர் டீசல் கசிவு

ஹப்புத்தளை – பத்கொட பகுதியில், இன்று அதிகாலை எரிபொருள் பௌசர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை 4 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றது.

கொழும்பில் இருந்து, 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன் ஹப்புத்தளை நோக்கிப் பயணித்த குறித்த எரிபொருள் பௌசர், வீதியை விட்டுவிலகிச் சென்று அருகில் உள்ள வீடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, காயமடைந்த குறித்த பௌசரின் உதவியாளர் பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விபத்தினால், குறித்த வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், வீட்டிலுள்ளவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தினால், குறித்த டீசல் பௌசரில் கசிவு ஏற்பட்டதை அடுத்து, அதிலிருந்து டீசல் வெளியேறுவதாகவும், குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவானோர் அதனை நிரப்பிச் செல்வதை அவதானிக்க முடிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles