Thursday, May 7, 2026
28.4 C
Colombo
செய்திகள்உலகம்பாகிஸ்தான் பாடசாலையொன்றில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் பலி

பாகிஸ்தான் பாடசாலையொன்றில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் பலி

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து ஆசிரியர்கள் மற்றும் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

பாடசாலை முடிந்து ஆசிரியர்கள் பரீட்சை வினாத்தாள் தயாரிக்கும் வேளையில் பாடசாலைக்குள் நுழைந்த இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன, மதக் குழப்பம் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும் கொலைச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles