தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணையில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கு நீதிமன்றில் இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் சார்பில் ஆஜரான அரச தரப்பு சட்டவாதி குற்றப் பத்திரிகையினை தாக்கல் செய்வதற்குக் கால அவகாசம் கோரிய நிலையிலேயே மேற்கண்ட அவகாசம் வழங்கப்பட்டது.
சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் நீதிமன்றத்தினால் மேற்கண்ட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரணி அலென் சாஹினோ இந்த நீதிமன்ற உத்தரவுக்கு ஆட்சேபனை வெளியிட்டார்.
இந்த தாமதமானது கடுமையான பிணை நிபந்தனைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட குடும்ப மற்றும் சமூக ஆதரவுடன் உள்ள ஒரு வெளிநாட்டுப் பிரஜைக்குத் தேவையற்ற சிரமங்களை ஏற்படுத்தும் என்று வாதிட்டார்.
அதேநேரம் வழக்கு விசாரணைக்கான சட்டச் செலவுகளை பெறுவதற்கு தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரணி நியூ சவுத் வேல்ஸ் அரச வழக்கறிஞரகத்தையும் நாடவுள்ளதுடன், அதற்கான விண்ணப்பத்தையும் சமர்ப்பிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இந்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் மே 18 ஆம் திகதி மீள எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.