தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிச்சுமையை அடுத்த ஐந்து வருடங்களில் படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கரவனெல்லையில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் படி 128 வீதமாக இருக்கும் கடன் தொகை எதிர்வரும் வருடங்களில் 95 வீதமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு ஓரளவு சீரான பொருளாதார நிலைமைக்கு வரும் போது தற்போதிருக்கும் வரிகள் கட்டம் கட்டமாக குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.