ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரிம்லினை குறிவைத்து நேற்றிரவு ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாக ரஷ்யா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி புட்டினை கொலை செய்ய 2 டிரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாகவும், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் ரஷ்யா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகை மீது 2 ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாகவும், அந்த 2 ட்ரோன்களும் மின்சார ரேடார் மூலம் வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஜனாதிபதி மாளிகையில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்த ட்ரோன் தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என கூறியுள்ள ரஷ்யா இந்த தாக்குதலுக்கு யுக்ரைன் தான் காரணம் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.