பாட்டியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்த பேரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாண கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயகி டி அல்விஸ் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கேகாலை யட்டோகொட பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய நபருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு இந்தக் குற்றம் இடம்பெற்ற போது சந்தேகநபருக்கு 37 வயது மற்றும் பாட்டிக்கு 76 வயது என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி இரவு மது அருந்திவிட்டு பாட்டி வசிக்கும் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
சந்தேகநபரின் தாயின் தாயான இந்த வயோதிபப் பெண் அப்போது உறங்கச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர், குற்றம் சாட்டப்பட்ட பேரன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓட முயன்றபோது சந்தேக நபர் யார் என்பதை அடையாளம் கண்டுகொண்டதால் வயோதிப பெண் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது.