Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாப்புறுதி பணத்துக்காக மனைவியை கொன்ற கணவன் கைது

காப்புறுதி பணத்துக்காக மனைவியை கொன்ற கணவன் கைது

மனைவியின் ஆயுள் காப்புறுதி பணத்தை பெற்றுக் கொள்வதற்காக அவரை கொன்ற கணவனை பிடிகல பொலிஸார் நேற்று (03) கைது செய்துள்ளனர்.

24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தனது நண்பருக்கு இருபது இலட்சம் ரூபாவையும், டெக்சி நிறுவனம் ஒன்றின் ஜீப்பையும் கொடுத்து மனைவியை விபத்துக்குள்ளாக்கியுள்ளமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி பிடிகல, மாபலகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பெண்ணுக்கு 40 வயது எனவும், அவர் 4 ஆயுள் காப்புறுதிகள் வைத்திருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் இந்தப் பெண்ணைக் கொன்று அவரது நான்கு ஆயுள் காப்புறுதிகளில் இருந்து நட்டஈட்டைப் பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

எல்பிட்டிய பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்ததையடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கெப் வண்டியின் சாரதி பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பிடிகல பொலிஸார் தெரிவித்தனர்.
பகிர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles