Wednesday, November 20, 2024
25.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகரால் நடத்தப்பட்ட விபசார விடுதி முற்றுகை

ஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகரால் நடத்தப்பட்ட விபசார விடுதி முற்றுகை

தங்கும் அறைகளை வாடகைக்கு விடுவதாக கூறி ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகரால் நடத்தப்பட்ட விபசார விடுதியை சுற்றிவளைத்து நான்கு பேருடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆறு யுவதிகளை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக குருநாகல் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகல் கண்டி வீதியில் கட்டுவான சந்திக்கு அருகில் தங்குமிடம் என்ற போர்வையில் இந்த விபசார விடுதி நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போது, ​​சிறிய அளவிலான ஐஸ் மற்றும் சிறிய அளவிலான கஞ்சாவை கண்டெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபச்சாரத்தில் ஈடுபடும் யுவதிகள் இந்த போதைப்பொருட்களை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த இடம் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியினால் நடத்தப்படுவதனால் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத போதிலும் குருநாகல் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த இடம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

விபசார தொழிலில் ஈடுபட்டு வந்த யுவதிகள் தங்குமிடங்களில் பணிபுரியும் குழுவாக இந்த இடத்தில் இருந்ததால், நபர் ஒருவரை நியமித்து இந்த இடத்தை சுற்றிவளைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட யுவதிகள் மொனராகலை, அனுராதபுரம், கொழும்பு மற்றும் பத்தரமுல்லை ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 19 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களின் பராமரிப்புக்காக ஆறாயிரம் ரூபாய் செலுத்தியிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles