இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
மிக் ரக விமானங்களை கொள்வனவு செய்ததாக கூறப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு நேற்று (03) கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது அவர் மீதான வெளிநாட்டு பயண தடையை தற்காலிகமாக நீக்குமாறு குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் 2015 ஆம் ஆண்டு ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தில் செய்த முறைப்பாடு அடிப்படையில் 2015 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் தாக்கல் செய்யப்பட்டது.