Tuesday, February 10, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு யூரியா, MOP உரங்களை வழங்க ரஷ்யா இணக்கம்

இலங்கைக்கு யூரியா, MOP உரங்களை வழங்க ரஷ்யா இணக்கம்

இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்காக யூரியா மற்றும் MOP உரங்களை வழங்குவதற்கு ரஷ்ய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நிலவும் இருதரப்பு ஒத்துழைப்பின் அடிப்படையிலும் இரு நாடுகளுக்குமிடையில் நிலவும் நட்புறவை உறுதிப்படுத்தும் வகையிலும் யூரியா மற்றும் MOP உரங்களை வழங்க ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.சாகரின் மற்றும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர ஆகியோருக்கு இடையில் விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான யூரியா மற்றும் MOP உரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும் ரஷ்ய தூதுவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles