Friday, March 27, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்களுக்கு விசேட சலுகை

வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்களுக்கு விசேட சலுகை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த அரச ஊழியர்கள், தாங்கள் போட்டியிடும் வட்டாரத்திலுள்ள அரச நிறுவனங்களை தவிர்த்து, அருகிலுள்ள வேறு வட்டாரங்களில், இடமாற்றம் மூலம் சேவையில் ஈடுபட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் என்ற அடிப்படையில், பிரதமர் தினேஸ் குணவர்தன இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

இந்த அனுமதி மூலம் குறித்த அரச ஊழியர்கள் தாம் போட்டியிடும் வட்டாரம் தவிர்த்து, வேறு வட்டாரங்களிலுள்ள அரச நிறுவனங்களில் கடமையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles