கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (4) நள்ளிரவு வரை இதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
வினாத்தாள் திருத்த பணிகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக குறித்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு கடந்த (27) முதல் மே 2 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.