Sunday, July 6, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரணில் - சஜித்தை சந்திக்கிறார் வடிவேல் சுரேஷ்

ரணில் – சஜித்தை சந்திக்கிறார் வடிவேல் சுரேஷ்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோரை இன்று சந்திக்க உள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெறவுள்ள சந்திப்பில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு, சமுர்த்தி கொடுப்பனவு, காணியுரிமை மற்றும் வீட்டுரிமை என்பன தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பின்போது, பசறை – மடுல்சீமை பகுதியில், அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில், பங்கேற்காமைக்கான விளக்கத்தை வழங்க வேண்டும் எனக் கோர உள்ளதாக வடிவேல் சுரேஸ் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles