Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதியை சந்தித்தார் இந்திய விமானப்படை பிரதானி

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய விமானப்படை பிரதானி

இலங்கை வந்துள்ள இந்திய விமானப் படையின் பிரதானி எயார் சீப் மார்ஷல் வி.ஆர். செளத்ரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (2) சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்புத் துறையின் ஆழமான ஒத்துழைப்பு வழி வகைகள் மற்றும் ஈடுபாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை நாட்டை வந்தடைந்த இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌதாரி இந்திய-இலங்கை உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் பல தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளார்.

குறிப்பாக இலங்கை விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷன பத்திரண, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இலங்கை தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதானி மேஜர் ஜெனரல் சேனாரத் யாப்பா ஆகியோருடன் சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles