இலங்கைக்கு குறைந்த வட்டியில் சலுகைக் கடன்களை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரியுள்ளார்.
தென்கொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் அலி சப்ரி, சியோலில் வைத்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவை (Masatsugu Asakawa) சந்தித்தபோது இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கை தற்போது உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே குறைந்த வட்டியில் சலுகைக்கடன்களை வழங்கமுடியும் என்பதை அமைச்சர் அலி சப்ரி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேபோன்ற கோரிக்கையை உலக வங்கியும் ஏற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.