தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் வேகமாக அதிகரித்து வருவதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெஹல்கமு ஓயாவைச் சூழவுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் அவர் தெரிவித்தார்.
இந்நிலைமையின் அடிப்படையில் இன்று (03) காலை 6.30 மணியளவில் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 147 அடி 07 அங்குலமாக காணப்படுவதாகவும், விமலசுரேந்திர நீர்மின் நிலையம் உள்ளிட்ட மூன்று நீர் மின் நிலையங்களுக்கு நீர் மின் உற்பத்திக்காக நீரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். .