Sunday, November 17, 2024
32 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇந்திய கிரிக்கெட் வீரர் ஷமிக்கு எதிராக அவரது மனைவி புகார்

இந்திய கிரிக்கெட் வீரர் ஷமிக்கு எதிராக அவரது மனைவி புகார்

இந்திய கிரிக்கெட் வீரர் மொஹமட் ஷமிக்கு எதிரான பிடியாணையை இடைநிறுத்த கல்கத்தா மேல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, அவரது மனைவி இந்திய உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

ஷமியின் மனைவி ஹசின் ஜஹான், தனது சட்டத்தரணிகள் மூலம், கல்கத்தா மேல் நீதிமன்றம் கடந்த மார்ச் 28ஆம் திகதி வழங்கிய உத்தரவை, ரத்து செய்யக்கோரி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மொஹமட் ஷமிக்கு எதிராக வீட்டு வன்முறை மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில், மனைவி ஹசின் ஜஹான் முதன்முதலில் 2018 ஆம் ஆண்டு ஜாதவ்பூர் காவல்துறையில் முறைப்பாடு அளித்தார்.

வேகப்பந்து வீச்சாளர் ஷமி தொடர்ந்து அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து வந்தாலும், அவரை பிரிந்துள்ள மனைவி, அந்த வழக்கை இடைவிடாமல் தொடர்ந்துள்ளார்.

ஷமி மற்றும் அவரது மூத்த சகோதரர் ஹசிப் அகமது ஆகியோர் 2018 இல் கொல்கத்தா காவல்துறையின் மகளிர் குறைதீர்ப்புப் பிரிவால் விசாரிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், அலிபூர் நீதிமன்றம் ஷமிக்கு எதிராக பிடியாணையை பிறப்பித்தது.

எவ்வாறாயினும், பிடியாணை பின்னர் நீதிமன்ற உத்தரவில் இடைநிறுத்தப்பட்டது.

இதனையடுத்து, ஷமி ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதாக ஹசின் ஜஹான் கூறியதை அடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஊழல் தடுப்பு பிரிவு ஷமிக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுத்தது.

ஜஹான் தனது மனுவில், ஷமி தனது கிரிக்கெட் சுற்றுப்பயணங்களின் போது, இன்று வரையிலும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வழங்கிய விடுதி அறைகளில் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் மற்றும் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார்.

அத்துடன், தமது கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தன்னை தாக்கியதுடன், தொடர்ந்தும் வரதட்சணை கேட்டு வந்தனர் என்றும் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles