செய்திகள்உள்நாட்டுபுத்தர் சிலையை சேதப்படுத்திய நபர் கைது

புத்தர் சிலையை சேதப்படுத்திய நபர் கைது

முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட சிறிய பௌத்த விகாரை மற்றும் புத்தர் சிலையை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொக்கிளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

பௌத்த விகாரைக்கு யாரோ சேதம் விளைவிப்பதாக கொக்கிளாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அதன் அதிகாரிகள் குழுவொன்று குறித்த இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட போது இவரை கைது செய்துள்ளனர்.

பௌத்த விகாரையின் பல சுவர்கள் சேதமடைந்துள்ள நிலையில், குறித்த விகாரையில் இருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு உடப்பு பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என கொக்கிளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles